×

திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையில் சாலை ஓர முட்புதர்களால் விபத்து அபாயம்

திருத்தணி, பிப்.17: திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள், வகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருத்தணி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் கீழ் திருத்தணி நாகலாபுரம் சாலை, திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் முதல் திருவாலங்காடு  வரை, அரக்கோணம் முதல் திருவாலங்காடு வழியாக நாராயணபுரம் கூட்டு சாலை வரை, திருத்தணி கன்னிகாபுரம் சாலை வழியாக குருவராஜப்பேட்டை வரை, திருத்தணி கரூர் சாலை வழியாக பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் வரை, திருத்தணி தும்பி குளம் வழியாக நல்லாட்டூர் வரை, சென்னை-திருப்பதி சாலையில் உள்ள பொன்பாடி முதல் கொல்லகுப்பம் பூனிமாங்காடு வரை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 தற்போது இரண்டு பக்கவாட்டிலும் புதர்களும் செடிகளும் மண்டி உள்ளன. இதனால் இரண்டு வாகனங்கள் வரும்போது இரண்டு சக்கர வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் பல வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் கை, கால் உடைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே உடனடியாக திருத்தணி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள புதர்கள் மற்றும் விஷச் செடிகளை அகற்றி, ஆங்காங்கு சாலையில் உள்ள மரண பள்ளங்களை சீரமைத்து தார் சாலையையும், மண் சாலையையும் சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Road Accidents ,
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...