×

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர் கூட்டம்

காஞ்சிபுரம், பிப். 17: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை (18-2-2020) மாலை 4.00 மணியளவில் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி  தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்ட துணைச்செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 67வது பிறந்தநாள் விழா, பிப்.17ம் தேதி அன்று நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  எனவே திமுக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும்  தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Executive Committee Meeting ,DMK ,Kanchi North District ,
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...