×

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு போராட்டம்

காஞ்சிபுரம், பிப். 17: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.இதைக்கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கூட்டமைப்பு தலைவர் பாசறை செல்வராஜ் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தின்போது தேசிய கொடிகளை ஏந்தியபடி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில  அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், 50 ைகக்குழந்தைகளுடன் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED திட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை...