×

மாமியாருக்கு வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி பி.பி.காலனி, 3வது தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி (50). இவரது மனைவி பாத்திமா (45). இவர்களது மகள் நிஷா (30). இவரும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம்  செய்து கொண்டனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு நிஷா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு சீனிவாசன் போதையில் மாமியார் வீட்டுக்கு சென்று, நிஷாவை அனுப்புமாறு கேட்டுள்ளார். இதற்கு மாமியார்  பாத்திமா மறுப்பு தெரிவித்து சீனிவாசனை திட்டியதாக தெரிகிறது. இதனால் சீனிவாசன் அரிவாளால் பாத்திமாவை வெட்டிவிட்டு தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாத்திமாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  புகாரின்பேரில் எம்கேபி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Tags : mother-in-law ,
× RELATED பெண் காவலர்கள் மீது எஸ்.பி யிடம் மாமியார் புகார்