×

ஆத்தூரில் தேமுதிக கொடியேற்று விழா

ஆத்தூர், பிப்.13: ஆத்தூர் நகர தேமுதிக சார்பில், நேற்று 20வது ஆண்டு கொடி அறிமுக நாளை முன்னிட்டு சாரதா ரவுண்டானா பகுதியில், நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன் கட்சிக்கொடியேற்றினார். மாவட்ட துணை செயலாளர் சோலைசந்திரன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகர செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெங்கடேசன், ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கன்னியப்பன், ஈச்சம்பட்டி கிராம ஊராட்சி தலைவர் ராணிவீராசாமி, துணைத்தலைவர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டை வெங்கடேசன், மாதேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு ரஜினிகுமார், நகர பொருளாளர் இன்பவேல், பெருமாள், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : flag flag ceremony ,Athur ,
× RELATED சேலம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி