×

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி

நாமக்கல், பிப்.13: நாமக்கல்லில் மாவட்ட தேசிய பசுமைப்படை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற உலகம், துய்மை தொடர்பான விழிப்புணர்வு பேச்சுப்போட்டி வினாடி-வினா, ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் குணசேரகன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியர் மற்றொரு பிரிவாகவும் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவருக்கு ₹1,500, 2ம் பரிசு ₹1000,  3ம் பரிசு ₹750 மற்றும் இரண்டு ஆறுதல் பரிசாக ₹500 வழங்கப்பட்டன. மொத்தம் 60 மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Environmental Awareness Competition for School Children ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி