×

ராசிபுரம் அருகே புதிய குழாய் பதிக்க தோண்டிய சாலையை சீரமைக்க கோரிக்கை

ராசிபுரம், பிப்.13: ராசிபுரம் - காட்டூர் இடையே குழாய் அமைக்க தோண்டப்பட்டதால் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் கடந்த 3ஆண்டுகளுக்கு மேலாக, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளதால், பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.  இதில் ராசிபுரம் அங்காளம்மன் கோயில் முதல் காட்டூர் செல்லும் சாலை, சில வருடங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. சாலையில் புழுதி பறப்பதால் நடந்து மற்றும் வாகனத்தில் செல்பவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், பாச்சல் முருங்கப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து  ராசிபுரம் -காட்டூர் சாலையை புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pipe embankment road ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து