×

பெங்களூருவில் இருந்து ₹1.80 லட்சம் குட்கா கடத்திய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.13:பெங்களூரில் இருந்த ஈரோட்டுக்கு கடத்த முயன்ற ₹1.80 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு, கிருஷ்ணகிரி வழியாக குட்கா கடத்தப்படுவதாக, கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ₹1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது.விசாரணையில், அவை பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வேனை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த பழனிசாமி மகன் கவுதம்(26), வேன் உரிமையாளரான பெருந்துறையை சேர்ந்த கண்ணன்(46) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்கா கடத்த பயன்படுத்திய வேன் மற்றும் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,kidnapping ,Bangalore ,Kutka ,
× RELATED திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட...