×

கிருஷ்ணகிரி ஒன்றிய குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.13:கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக்கூடத்தில், நேற்று காலை ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர், உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஸ்வரி, சாந்தி, பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை மேம்பாடு, தெருவிளக்கு போன்ற பணிகள், பகுதி வாரியான தேவைகள் குறித்து ஒன்றிய குழு உறுப்பினர்கள் மன்றத்தில் விவாதம் நடத்தினர். பணிகள் அனைத்தும் நிதி நிலையை கருத்தில் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Krishnagiri Union Committee Meeting ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்