×

பாகலூரில் கோட்டாட்சியர் ஆய்வு

ஓசூர், பிப்.13:ஓசூர் அருகே பாகலூரில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி கோட்டாட்சியர் வீடுகள் தோறும் நேரில் ஆய்வு செய்தார். உலகநாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென வலியுறுத்தி ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன் பாகலூர் கிராமத்தில் வீடுகள் தோறும் சுகாதாரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுமக்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சளி, இருமல்  மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அதற்காக மருத்துவர்கள் அனைத்து நேரங்களிலும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.பின்னர் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளையும், சாக்கடைகளையும் உடனடியாக சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சுகாதார குழுவினர், ஒன்றிய குழு தலைவர் சசி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Bagalur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்