×

தளியில் ₹34.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

தேன்கனிக்கோட்டை, பிப்.13:  தளியில் ₹34.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார். தளியில் ஆதிதிராவிடர் காலனி முதல் மயானம் வரை ₹25 லட்சம் மதிப்பிலும், தளி அருகே சின்ன ஆவேரிப்பள்ளி முதல் லம்பாடி தொட்டி வரை ₹9.50 லட்சம் என ₹34.50 லட்சம் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகளை, தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி ஒன்றிய சேர்மன் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஷ், துணை செயலாளர் முனிராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிவராஜ், கோபி, கங்கப்பா, சின்னபாபு, சிவா, போடப்பா, சீனிவாசன், முன்னாள் தலைவர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுனில்குமார், பதி, நாட்டாமை ராமகிருஷ்ணா, மணி, முரளி, இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மல்லிகார்ஜூனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பழைய மாமல்லபுரம் புறவழிச்சாலையில்...