×

ஓசூர் அப்பாவு நகரில் சென்னை சித்த மருத்துவமனை திறப்பு

ஓசூர், பிப்.13: ஓசூர் தளி சாலையில் உள்ள அப்பாவு நகரில் தி சென்னை சித்த மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. தி சென்னை சித்த மருத்துவமனையை தளி எம்எல்ஏ பிரகாஷ் திறந்து வைத்தார். ஓசூர்  எம்எல்ஏ சத்யா, இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். விழாவில், தி சென்னை  மருத்துவமனை மருத்துவர் வினோத்குமார் வரவேற்றார்.  மருத்துவர்கள் சௌமியா,  செல்லக்குமார், ரத்தினம், ராமகிருஷ்ணன், வேதாத்திரி ஆகியோர் கலந்துகொண்டு,  மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து  மருந்து, மாத்திரைகளை வழங்கினர். விழாவில், வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கப்பட்டு, இலவச முதன்மை பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகள்  செய்யப்பட்டது.

Tags : Opening ,Chennai Siddha Hospital ,Hosur Abadu ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்