×

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.13:கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவராக புதியதாக பொறுப்பேற்ற மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் பங்கேற்றார். இதில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். சூளகிரி மற்றும் ஓசூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், கூடுதல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும்.
மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள படேதலாவ் ஏரி வாய்க்கால் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஊத்தங்கரை ஒன்றியம் பெரியதள்ளப்பாடி ஊராட்சி அங்குத்தி சாலையிலிருந்து புது ஏரி வரை கால்வாய் கட்டும் பணிக்கு மன்ற அங்கீகாரம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், அனைத்து கட்சிகளை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : District panchayat committee meeting ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 127 பேர் மீது வழக்குப்பதிவு