×

நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி டவுன் குப்பாகவுண்டர் தெரு ஆத்துமேடு, நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தர்மபுரி டவுன் குப்பாகவுண்டர் தெரு ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11ம் தேதி புதிய மூர்த்திகள், பரிவார தேவதைகள் கரிகோலம் மற்றும் தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாலிகளை அழைத்து மேளம், பம்பை வாத்தியங்களுடன் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு 2ம் கால பூஜை, நாடிசந்தானம், தனஹோமம் நடந்தது. காலை 9.30 மணிக்கு யாத்ரா தானத்தை தொடர்ந்து, புனித நீர் கொண்ட திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. இதையடுத்து சக்தி கலசங்கள் ஆலயம் வலம் வந்தது. காலை 9.45 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரர் விமான கோபுரம், மூலவர், பரிவார தேவதைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Numbundeswarar Temple Kumbabhishekam ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்