×

கராத்தே போட்டியில் பள்ளி மாணவி சாதனை

அரூர், பிப்.13: உலக கோசிஹி கராத்தே அசோசியேசன் சார்பில், சேலத்தில் மண்டல அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், அரூர் புனித அன்னாள் மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி தில்லைக்கரசி கலந்து கொண்டு, 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவியையும், மாஸ்டர் குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் இக்னேஷ்பிரிட்டோ மற்றும் தலைமை ஆசிரியர் பால்பெனடிக்ட், உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுந்தர்ராஜ், ஜான்பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED ஓட்டப்பிடாரத்தில் அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி