×

பாமக செயற்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி நகர பாமக செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நகர தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர் தமிழன், தொகுதி அமைப்பு செயலாளர் சுப்ரமணியன், தொகுதி அமைப்பு தலைவர் மணி, முன்னாள் நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தர்மபுரி நகரின் சனத்குமார் நதியின் ஆற்றை தூர்வாரி, கழிவுநீர் செல்லாதவாறு தூய்மையாக பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தர்மபுரி நகரின் பெரும்பாலான கழிவுநீர், ராமக்காள் ஏரியில் நேரடியாக சென்று கலக்கிறது. இந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விட நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி நகரில் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Working Committee Meeting ,
× RELATED திருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்