×

ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் ஆண்டு விழா

ராஜபாளையம், பிப்.13: ராஜபாளையம் பி.ஏ.சி ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. பி.ஏ.சி.ராமசாமிராஜா கல்வி நிறுவனங்களின் டிரஸ்டி என்.கே கண்டன் ராஜா தலைமையில் நடைபெற்றது. ராம்கோ குழும கல்வி தலைமை அதிகாரி டாக்டர் ஆர். வெங்கட்ராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி ஆண்டு அறிக்கையை முதல்வர் (பொ) வீ. சீனிவாசன் சமர்ப்பித்தார். மாணவர் தலைவர் ஜோதிராமலிங்கம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மனிதவள துறை, இயக்குநர் டாக்டர் சுதீந்திரநாத் பாண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றுகளும், பரிசுகளும் வழங்கி உரையாற்றினார்.

அனைத்து மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் எம். லோகேஷ் பிரபுவிற்கு பி.ஏ.சி ராமசாமி ராஜா நாற்றாண்டு நினைவு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. கல்லூரி பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பொன்னாடை மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள்், ராம்கோ குழுமத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர் செயலாளர் ஜி. ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Rajapalayam PACR Polytechnic Anniversary ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...