×

நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

அருப்புக்கோட்டை, பிப்.13: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் செட்டிகுறிச்சியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கான துவக்கவிழாவில் திட்ட அலுவலர் வேலவன் வரவேற்றார். கல்லூரி முதல்வர்( பொ) இசக்கிதுரை தலைமை வகித்தார். துணைமுதல்வர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். செட்டிகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேவிகேஆர்.பிரபாகரன் முகாமினை துவக்கி வைத்து பேசினார்.டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அழகுமலை கண்ணன், பேராசிரியர்கள் பூவை, உமாராணி, நாகராஜன், மகேஸ்வரன், ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் ராஜவேல் நன்றி கூறினார்.

Tags : Country Welfare Program Camp ,
× RELATED நாட்டு நலப்பணி திட்ட முகாம்