×

சிவகங்கை கலெக்டர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை, பிப். 13: ஊரக உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த நவம்பரில் தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கபப்பட்டுள்ளது. இதையடுத்து புதிதாக உருவாக்ககப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரை, மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. சில இடங்களில் அதிமுக தேர்தல் சட்ட விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் சங்கராபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்ைக முடிந்தவுடன், திமுகவை சேர்ந்த வேட்பாளர் தேவி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியது. ஆனால் ஆளும்கட்சியான அதிமுக தலையீடு காரணமாக தேர்தல் மையத்தில் இருந்த அதிகாரி மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிட்டார். மறுநாள் காலை 5 மணிக்கு அதிமுகவை சேர்ந்த பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஆணையத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த வாக்கு எண்ணிக்கை மோசடிக்கு எதிராக திமுக வேட்பாளர் தேவி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்நார். விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்று கூறியதோடு, அதிமுக வேட்பாளர் பிரியதர்ஷினி வழக்கு தான் ெதாடர முடியும்? என்றும், அவருக்கு எப்படி வெற்றி சான்றிதழ் வழங்ககப்பட்டது என விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு பின்பு, திமுக வேட்பாளரை பதவியேற்க அனுமதிக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் அதிமுக வேட்பாளரும் மேல்முறையீடு செய்துள்ளார். இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Sivaganga Collector ,Supreme Court ,
× RELATED நிர்பயா பாலியல் குற்றவாளி வழக்கு: அவசர...