×

தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு

திருப்புத்தூர், பிப். 13: கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதி மாற்றம் செய்வதற் கான சிறப்பு முகாம் நடந்தது. இந்நிலையில், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பதிவு முகாமில் பதிவு செய்யப்பட்ட புதிய வாக்காளர் படிவங்களை பரிசோதிக்கும் வகையில், திருப்புத்தூர் அருகே தென்கரை கிராமத்தில் நேற்று திடீரென புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை தேர்தல் மேற்பார்வையாளர் சம்பத் அதிகாரிகளுடன் நேரடியாக வீட்டு முகவரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, வாக்காளர்களிடமும், அலுவலர்களிடமும் வாக்காளர் படிவங்கள் குறித்தும், படிவம் நிரப்பும் முறைகள் குறித்தும் விசாரித்தார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெயலெட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Election Officer ,
× RELATED சீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா...