×

வத்தலக்குண்டுவில் விசி கட்சியினர் துண்டு பிரசுரம்

வத்தலக்குண்டு, பிப். 13: வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், திருச்சியில் கட்சி சார்பாக நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு பற்றி விளக்கியும் ஊர்வலமாக சென்று துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விசி கட்சி நில மீட்பு பிரிவு மாநில துணை செயலாளர் உலகநம்பி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செய்தி தொடர்பாளர் திருமாசெழியன் முன்னிலை வகித்தார்.

ஓவியரணி மாநில துணை செயலாளர் தமிழ்முரசு, ஒன்றிய துணை செயலாளர் மூர்த்தி, தொண்டரணி நிர்வாகிகள் மருதவீரன், மைக்கேல்ராஜ், அன்புதோழி மற்றும் பட்டிவீரன்பட்டி ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெத்தானியபுரத்தில் தொடங்கிய ஊர்வலம் திண்டுக்கல் ரோடு, காளியம்மன் கோயில், மெயின்ரோடு பஸ்நிலையம், பெரியகுளம் ரோடு வழியாக சென்று மஞ்சளாற்று பாலம் அருகே நிறைவடைந்தது. வழியெங்கும் பொதுமக்களிடமும், கடை வியாபாரிகளிடம் துண்டுபிரசுரம் வழங்கி சென்றனர்.

Tags :
× RELATED திண்டுக்கல், பழநி ரயில்வே...