×

வெயில் உக்கிரத்தால் வேர்குரு பாதிப்பு குழந்தைகள் அவதி

திண்டுக்கல், பிப். 13: வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளதால், குழந்தைகளுக்கு வேர்க்குரு போன்ற தோல் நோய் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால், தோட்டம் மற்றும் காடுகளில் கூலிவேலை செல்வோர், டூவீலரில் வியாபாரம் செய்வோர் மற்றும் திறந்த வெளிகளில் வேலை செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் பெரும்பாலான தெருக்களில் சிமென்ட் சாலை, பேவர்பிளாக் சாலை, தார்ச்சாலையாக மாறியுள்ளது. பெரும்பாலான தெருக்களில் மரங்களும் இல்லை. வெயிலின் உக்கிரத்தால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜனநடமாட்டமே குறைவாக உள்ளது.

இதனிடையே, தெருக்களில் விளையாடும் குழந்தைகளுக்கு வெயிலின் உக்கிரத்தால் தோல்நோய் ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட பகுதியில் குழந்தைகளுக்கு வேர்க்குரு போன்ற தோல் நோய் அதிவேகமாக தாக்கி வருகிறது. இதனால், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘‘பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெயில் நேரங்களில் வெளியில் அனுப்பக்கூடாது. குழந்தைகளுக்கு இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுகளை கொடுக்கவேண்டும். கெமிக்கல் கலந்த குளிர்பானங்களை தவிர்க்கவேண்டும். அதிக வேர்க்குரு பாதிப்பு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்’’ என்றார்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...