×

உடுமலை பகுதியில் நெல் அறுவடைக்கு இயந்திரம் கிடைக்காமல் தட்டுப்பாடு

உடுமலை, பிப். 13:  உடுமலை பகுதியில் நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை நிலவுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணை தண்ணீரை பயன்படுத்தி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் கடந்த அக்டோபரில் நெல் சாகுபடியில் ஈடுட்டனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஏற்கனவே, கூலியாட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், விவசாயிகள் இயந்திரங்களையே நம்பி உள்ளனர். ஆனால் தற்போது இயந்திரங்கள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:

அமராவதி, கல்லாபுரம், எலையமுத்தூர், குமரலிங்கம் பகுதியில் ஒரே நேரத்தில் அறுவடை நடப்பதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இயந்திரமும் சரியாக கிடைப்பதில்லை. அறுவடை தாமதமாகும்போது பயிர்கள் கட்டாகி நெல்மணிகள் கீழே விழுந்து சேதமாகிறது. இயந்திரம் தேவை அதிகம் என்பதால், ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் வடகை வசூலிக்கின்றனர். இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அறுவடைக்கு அதிக இயந்திரங்கள் கிடைக்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Paddy harvesting ,Udumalai ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...