×

மாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது

பொள்ளாச்சி,பிப்.13:பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசிமாத தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.  பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முழுவதும் மிகவும் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டிற்கான  மாசிமாத தேர்திருவிழா, முன்தினம் இரவு நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அன்று இரவு 9மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. அப்போது மேளதாளம் முழங்க, பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி கோயிலை சுற்றி வந்து, கோயில் முன்புள்ள பீடத்தில் நோன்பு சாட்டி வழிப்பட்டனர்.  மார்ச் மாதம் 9ம் தேதி வரை நடக்கும் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மதியம்,  இரவு என மூன்று நேரமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது.   இதில், வரும் 18ம் தேதி இரவில், கோயில் முன்பு திருக்கம்பம் நடப்படுகிறது.

அதில் விரதமிருந்த பெண் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுகின்றனர். பின், 25ம் தேதி கோயில் பூவோடும், சிலநாட்கள் பக்தர்கள் பூவோடும் துவங்குகிறது. 29ம் தேதி காலை கொடியேற்று நிகழ்ச்சியைடுத்து, முக்கிய நிகழ்வான மார்ச் 4ம் தேதி இரவு வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி துவங்குகிறது. முன்னதாக அன்று அதிகாலை முதல், பக்தர்கள் மாவிளக்கு ஏந்தி அம்மனை வழிபடுகின்றனர். இந்த தேர்திருவிழா 6ம் தேதி வரை நடக்க உள்ளது. தேரோட்டம் நிறைவு நாளன்று நள்ளிரவு பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நிகழ்ச்சி நடக்க உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : celebration ,Mariamman Temple Mass ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்