×

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவுதினம் அனுசரிப்பு

கோவை, பிப். 13: கோவையில் தியாகி என்.ஜி.ராமசாமி 77வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. கோவை  ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (எச்.எம்.எஸ்) சார்பில், சுதந்திர  போராட்ட வீரர் தியாகி என்.ஜி.ராமசாமி 77வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் சுங்கத்தில் உள்ள அவரது  சிலைக்கு எச்.எம்.எஸ். மாநில செயலாளர் ராஜாமணி தலைமையில் தொழிற்சங்க  தலைவர்கள் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். இதேபோல், சிங்காநல்லூரில்  உள்ள கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைமை அலுவலகம், சவுரிபாளையம்  கிளை சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜாமணி தலைமையில்  நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மதியம் சவுரிபாளையத்தில் உள்ள செசையர் ஹோம்  மனநலம் குன்றிய ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், சங்க பொதுச்செயலாளர் மனோகரன், பொருளாளர் சுப்பையன்,  நிர்வாகிகள் தேவராஜன், ஸ்ரீராம், மருதாசலம், மோகன்ராஜ், காளிமுத்து,  பழனிசாமி, தென்றல் நாகராஜ், கருப்புசாமி, செல்வராஜ், கிருஷ்ணன், சேகரன்,  ராஜாமணி, நிர்மலா, சுலோச்சனா ராஜமாணிக்கம், வெங்கிடுபதி உள்பட பலர்  பங்கேற்றனர்.

இதேபோல், தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம்  (ஐ.என்.டி.யு.சி.) சார்பில் தியாகி என்.ஜி.ராமசாமி 77வது நினைவுதினம்  சிங்காநல்லூர் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சங்க தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் கோவை  செல்வன் ஆகியோர் தலைைம தாங்கி, தியாகி என்.ஜி.ஆர். உருவச்சிலை மற்றும் உருவப்படத்துக்கு  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், தியாகி என்.ஜி.ராமசாமிக்கு  கோவையில் அரசு சார்பில் மணி மண்டபம் கட்டி, பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்  என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்,  கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன், முன்னாள்  கவுன்சிலர் ஷோபனா செல்வன், நிர்வாகிகள் பாலசுந்தரம், வெங்கிடுசாமி,  ஆறுச்சாமி, குப்புசாமி, ஆறுச்சாமி, நாகராஜன், ராமன், சேதுராமன், ஸ்ரீதர்,  முருகானந்தம், ராமசாமி, ரங்கநாதன், பாரதி, ராகவன், செந்தில்குமார்,  மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Memorial of Tyagi NG Ramaswamy ,
× RELATED இருசக்கர வாகன நம்பரை மறைப்பதால்...