×

பள்ளிகளில் மொழித்திருவிழா கொண்டாட உத்தரவு

ஈரோடு, பிப்.13:அரசு பள்ளிகளில் மொழித்திருவிழா கொண்டாட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின்கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தேசிய ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவில் உள்ள பல்வேறு மொழிகளின் தொன்மை, பண்பாடு, கலாசாரம் சார்ந்த சிறப்பு கூறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மொழித்திருவிழா கொண்டாட மத்திய மனித வள மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வரும் 14ம் தேதி அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, ஒவியம், நடனம், மாறுவேடம், செய்தி சேகரிப்பு, கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்துதல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் குறைந்தது 2 போட்டிகள் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1,050 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Tags : language festival ,schools ,
× RELATED தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே...