×

புதுக்கோட்டையில் 26ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, பிப். 13: புதுக்கோட்டையில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற நுகர்வோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காஸ் நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் பங்கேற்று காஸ் சிலிண்டர் நிரப்புவதில், பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், காஸ் சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் போன்ற குறைபாடு குறித்து புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 26ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகி்க்கிறார். எனவே காஸ் இணைப்பு குறித்து தங்களது கருத்துகள், குறைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் தங்களை குறைகளை மனுக்கள் அல்லது கூட்டத்தில் பங்கேற்று நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cass Consumer Oversight Meeting ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...