×

தேமுதிக கொடி நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

பொன்னமராவதி, பிப். 13: பொன்னமராவதி அருகே காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேமுதிக கொடிநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் 150 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக், பேனா, பென்சில் வழங்கப்பட்டன. இதைதொடர்ந்து காரையூர், அரசமலை, கண்டெடுத்தான்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது.தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி (எ) முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஆனந்த், கண்ணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் கேப்டன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : school children ,
× RELATED கருணை அடிப்படையில் பணி வழங்குவதில்...