×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த உணவு பாதுகாப்புத்துறை ஜீப்பில் டயர்கள் திருட்டு

பெரம்பலூர்,பிப்.13: பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக பின்புறம் கார் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த உணவுப் பாதுகாப்புத்துறையின் ஜீப் டயர்களை திருடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உணவு பாதுகாப்புத் துறை மாவ ட்ட நியமன அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின் புறமும் தென்புறமும் அலு வலகக் கட்டிடத்தை ஒட்டியே, பல்வேறு துறைகளின் ஜீப்புகள் நிறுத்துவதற்கான அரசு வாகனங்கள் நிறுத்துமிடம் (கார் ஸ்டேண்டுகள்) உள்ளது. இதில் பெரம்ப லூர் மாவட்ட உணவுப் பாது காப்பு துறைக்குச் சொந்தமான ஜீப் ஒன்று கலெக்டர் அலுவலக பின்புற பப்ளிக் கேண்டின், தென் பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிட த்தில் நிறுத்தப் பட்டிருந் தது.
பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை வாகனத்திற்கான டிரைவராக பணிபுரிந்துவந்த மோகன் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இற ந்துவிட்டார்.

அதற்குப்பிற கு புதுடிரைவர் பணியிடம் பெரம்பலூர் மாவட்ட உண வுப் பாதுகாப்புத் துறைக்கு நியமிக் கப்படாமல் இரு ந்து வருகிறது. இந்நி லை யில் கடந்த ஒன்றரை ஆண் டுகளாக பயன்படுத்தப்ப டாமல், சும்மாவே நிறுத்தப் பட்டிருந்த ஜீப்பை, தொடர் ந்து நோட் டமிட்டு வந்த மர்மநபர்கள், அந்த ஜீப்பின் பின்புறத்தில் தரமானதாக பயன்பாட்டில் இருந்துவந்த இரண்டு டயர்களை இரவோ டு இரவாக கழட்டிவிட்டு, அத ற்கு பதிலாக, பயன்படுத்த முடியாத காலாவதியான இரண்டு டயர்களை அதில் மாட்டி விட்டுச் சென்றுவிட்டனர்.

நேற்று இதனைப் பார்த்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலக ஊழியர்கள் மா வட்ட நியமன அலுவலர் டாக்டர் சௌமியா சுந்தரியிடம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டாக்டர் சௌமியா சுந்தரி கலெக் டர் அலுவலகம் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் துறைக்கு சொந்தமான ஜீப்பின் டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி பெரம்பலூர் காவல் நிலையத்திலும், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடமும் புகார் கொடுத்துள்ளார். பெரம்பலூர்மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டியுள்ள அரசு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நம்பிக்கையோடு நிறுத்தப் பட்டிருந்த ஜீப்பின் 2 டயர்கள் திரு டுபோன சம்பவம், அரசு ஊழியர்கள் மற்றும் டிரைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Theft ,office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...