மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் உள்ளிட்ட விதியை பின்பற்றி சாலைகளை மறுகட்டமைக்க புதிய நெறிமுறை உருவாக்கம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் சட்டம் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி சாலைகளை மறுகட்டமைப்பு செய்யவதற்கான நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.   சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், அலுவலகம்  செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிவதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும்  மறுவடிவமைப்பு ெசன்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின்  முதல் கட்டமாக 100 கி.மீ நீளமுள்ள சாலைகள் மறுவடிப்பு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு ெநறிமுறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுத்தலின்படி, பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார்,  கண்காணிப்பு பொறியாளர் பாபு, ஸ்மார் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செரூபல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து போக்குவரத்து கொள்கை மேம்பாட்டு நிறுவனம் தயார் செய்துள்ளது.

இந்த கொள்கையின்படி ஒரு சாலையில் சைக்கிள் பாதை, நடைபாதை, பேருந்து சாலை, சாலையோர வாகன நிறுத்தல், சாலையோர வியாபாரிகளுக்கான கடைகள், ஸ்ட்ரீட் பர்னிச்சர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் இணைந்து சாலைகள்  அமைக்கப்படவுள்ளது.

இவை அனைத்து பல்வேறு ஆய்வு நடத்தப்பட்டு இந்திய சாலை காங்கிரஸ், நகர்புற சாலை வடிவமைப்பு விதிகள் 2012, மேட்டார் வாகனச் சட்டம், மாற்றுத்திறனாளிகள் சட்டம், தேசிய நகர்புற போக்குவரத்து கொள்கை 2006, சாலையோர  வியாபாரிகள் சட்டம், சென்னை இயந்திய வாகனம் சாரா போக்குவரத்து கொள்கை 2014 உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகளை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் எற்ற வகையில் அமைக்கப்படவுள்ளது.  முக்கியமாக  சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களை இணைத்து டிரான்ஸட் சிஸ்டம் மற்றும் மெட்ரோ ரயில் அமைக்கும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள்  வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி முதற்கட்டமான அண்ணாநகர், தண்டையார்பேட்டை, ஜார்ஜ் டவுன், திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள 72 சாலைகள் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இதில்  நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மின்ட் சாலை, ராஜாஜி சாலை, கதீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பீட்டர்ஸ் சாலை, கிரீன்வேஸ் சாலை, கச்சேரி சாலை, டிஜிஎஸ் தினகரன் சாலை,  காமராஜர் சாலை, எல்டாம்ஸ் சாலை, சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மறுவடிமைப்பு செய்யப்படவுள்ளது.  இதற்கான திட்ட ஆலோசர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர் கட்டிடங்கள், முக்கிய சாலைகள்,  இணைப்பு சாலைகள், சிக்னல்கள், மரங்கள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள், நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகள் பயன்பாடு, வாகன நிறுத்த வசதி, நடைபாதை வியாபாரிகளுக்கான இடங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு  நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். இதனை தொடர்ந்து திட்டம் செயல்படுத்தபடும்.

பொதுமக்கள் பங்களிப்பு

இந்த திட்டத்தை ெசயல்படுத்துவதில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக நல நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் கருத்துகளை கேட்டு இணைந்து செயல்பட  வேண்டும் என்று இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பகுதி                                      நீளம்    பரப்பளவு    சாலைகளின் எண்ணிக்கை

அண்ணா நகர்                 13.08 கி.மீ    9.4 ச.கி.மீ    6

தன்டையார்பேட்டை            25.81 கி.மீ    18.7 ச.கி.மீ    8

நுங்கம்பாக்கம்               12.24 கி.மீ    10.7 ச.கி.மீ    11

மயிலாப்பூர்               30.5 கி.மீ    11 ச.கி.மீ    36

வேளச்சேரி              9.89 கி.மீ    13.8 ச.கி.மீ    8

அடையாறு              20.84 கி.மீ    13 ச.கி.மீ    17

Related Stories:

>