×

பிரதம மந்திரியின் விவசாயி கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெற உழவர் கடன் அட்டை தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

கரூர், பிப்.13:  கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள் செய்திக்குறிப்பு: பிரதம மந்திரியின் விவசாயி கவுரவ நிதித்திட்ட பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டையை வழங்குவதற்காக சிறப்பு பிரசாரம் மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்புத்திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவர் கடன் அட்டையைப் பெற்று மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம், உழவர் கடன் அட்டையை ஏற்கனவே பெற்றுள்ள விவசாய பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பினை உயர்த்த விண்ணப்பிக்கலாம். செயல்படாத உழவர்கடன் அட்டை உள்ளோர் வங்கி கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிக கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.

உழவர்கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கி கிளையை அணுகலாம், உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன்பிடிப்பதற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை வரம்பில் சேர்ப்பதற்காக வங்கி கிளையைஅணுகலாம். பிரதம மந்திரி கிஷான் திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணைதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்ட விவசாய பயனாளிகள் ஒருபக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிர் விவரங்கள் வேறுஎந்த வங்கி கிளையிலும் கடன்அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிப் பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொதுசேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலம் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Tags : applicants ,
× RELATED ஓசூரில் ஊரடங்கால் போக்குவரத்து...