×

மக்கள் எதிர்பார்ப்பு கரூர் புதுத்தெருவில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் நெரிசல் கல்லூரி வாகனங்கள் சிக்கி தவிப்பு

கரூர், பிப்.13:கரூர் ரயில்நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் புதுதெரு வழியாக சர்ச் கார்னர் மற்றும் ஜவகர்பஜார் வருகின்றன. இந்த தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் வரைமுறையின்றி வருவதால் பின்னால் வரும் வாகனங்கள் போக முடியாமல் தவிக்கின்றன. காலை மாலை நேரங்களில் செல்லும் பள்ளி கல்லூரி வாகங்களும் நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. ரயிலை பிடிப்பதற்காக அவசரமாக ரயில் நிலையத்திற்கு வாகனங்களில் செல்பவர்களும் போக்குவரத்து பிரச்னையில் தாமதமாக செல்ல நேரிடுகிறது. எனவே இந்த தெருவில் போக்குவரத்தினை முறைப்படுத்தி நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur Puducherry ,
× RELATED கடந்த ஒரு வாரத்தில் 144 தடை உத்தரவை மீறி...