×

காந்திகிராமம் வடக்கு பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

கரூர், பிப்.13: சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சணப்பிரட்டி காந்திகிராமம் வடக்குபகுதியில் அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி அருகில் மின்கம்பம் மிகவும் சேதம்அடைந்த நிலையில் இருக்கிறது. கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டுள்ளன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் கீழேவிழும் நிலை உள்ளது. வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. எனவே சேதம் அடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனே மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gandhigram ,area ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்