கே.வி.குப்பம் அருகே) தொழிலாளி மர்மச்சாவு

கே.வி.குப்பம், பிப்.13: கே.வி.குப்பம் தாலுகா மேல்மாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்(42), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 9ம்தேதி இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை 10 மணியளவில் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் அம்சவேணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அம்சவேணி தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கே.வி.குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>