×

முத்தையாபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

ஸ்பிக்நகர், பிப். 13: முத்தையாபுரம் தோப்பு தெருவில் உள்ள காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார். முத்தையாபுரம் தோப்பு தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் வேல்முருகன் பூசாரியாக உள்ளார். இரவு கோயில் நடையை சாத்தி விட்டு கோயில் பொறுப்பாளர் வழக்கறிஞர் செண்பகமல்ராஜாவிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். காலையில் சாமி கும்பிட சென்றவர்கள் உண்டியலைஉடைத்து பணம் திருடப்பட்டிருப்பதை பார்த்து முத்தையாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் சிறப்பு எஸ்ஐ சேகர் வழக்குப்பதிவு செய்தார். எஸ்ஐ சதீஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்ட தாழையூத்து பண்டாரபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் மணிகண்டராஜாவை கைது செய்தனர்.

Tags : temple shop ,
× RELATED வீட்டில் கஞ்சா விற்றவர் கைது