×

தென்காசி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள் கலெக்டர் தகவல்

தென்காசி, பிப்.13: தென்காசி மாவட்டத்தில் நாளை (14ம் தேதி) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருவாய்த்துறை சார்பில் ஒரு கிராமத்தில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய்  வட்டத்தில் மக்களை தேடி வருவாய்த்துறை மூலம் அம்மா திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நாளை (14ம் தேதி) சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம் , திருவேங்கடம் தாலுகா கரிசல்குளம் குறுவட்டம் மதுராபுரி,  தென்காசி தாலுகா மேலகரத்திலும்,  செங்கோட்டை தாலுகா செங்கோட்டை வட்டம் கணக்கப்பிள்ளைவலசை,  வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை குறு வட்டம் பல பத்திரராமபுரம், ஆலங்குளம் தாலுகா நெட்டூர் குறுவட்டம் நாராணபுரம்,  சிவகிரி தாலுகா சிவகிரி குறுவட்டம் சிவ ராயகிரிபகுதி 2, கடையநல்லூர் தாலுகா புளியங்குடி குறுவட்டம் மலையடிக்குறிச்சி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  முதியோர் உதவித்தொகை பரிசீலனை விண்ணப்பம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட சேவைகள் தங்களது கிராமத்திற்கு கிடைத்திடும் வகையில் வருவாய்துறை மக்களுக்கு ஆற்றிவரும் சேவையை துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயனடைய இதன் மூலம் வழிவகை செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Locations ,Mother Camp Camp ,Tenkasi District ,
× RELATED திருவண்ணாமலையில் நான்கு இடங்களில்...