×

திருக்கழுக்குன்றத்தில் அவலம் பேய் பங்களாவாக காணப்படும் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை

திருக்கழுக்குன்றம், பிப்.13: திருக்கழுக்கத்தில்  விஷப் பூச்சிகளின் கூடராமாக மாறிய பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை, பேய் பங்களாவை போல் காணப்படுகிறது. இதனை அதிகாரிகள் சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் பொதுப்பணித் துறை அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை அமைந்துள்ளது. இந்த கட்டித்தின் வளாகத்தை அதிகாரிகள் சரிவர பராமரிப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் அடர்ந்த முட்செடிகளில் பாம்பு, தேள், பூரான் உள்பட பல்வறு விஷப் பூச்சிகள் அதிகளவில் உலா வருகின்றன.இந்த விஷப்பூச்சிகள், அடிக்கடி பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்குள் சென்று விடுகின்றன. அந்த நேரத்தில் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், அதனை கண்டும் கடும் பீதியடைகின்றனர். சில நேரங்களில் அங்கு வரும் விஷ பாம்புகளை கண்டு, ஓட்டம் பிடிக்கின்றனர்.

மேலும் இந்த வளாகத்தின் அருகிலேயே காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குள் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் சென்று விடுகின்றன. அங்குள்ள சிலரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் காவலர் குடும்பத்தினர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொதுப்பணித் துறை அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையை சரிவர சுத்தம் செய்யாததால், அந்த இடம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பல ஆண்டுகளாக காடு போல் அடர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என சமூகஆர்வர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Public Works Inspection House ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...