×

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம்

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா,  செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் கிஸான் கிரெடிட் கார்டு (உழவர் கடன் அட்டை) திட்டத்தின் பயன்கள் சென்றடைய திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கு இடுபொருள் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுக்கு ₹6000 நிதி உதவியுளிக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற அனைத்து பயனாளிகளுக்கும் பிற நிதி தேவைகளை உடனுக்குடன் பூர்த்திசெய்யும் நோக்கில் உழவர் கடன் அட்டை திட்டத்தில் வங்கிகள் மூலம் கிஸான் கிரெடிட் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து வங்கி கிளைகளிலும் 15 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் வரும் 24ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கி கிளையை தங்களுடைய ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம். மேலும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்புக்கும் உழவர் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. எனவே பிரதம மந்திரியின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்று உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் பயன்பெற அனைத்து விவசாயிகளுக்கும் அந்தந்த பகுதிகளிலுள்ள வங்கிக் கிளையை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.


Tags : Kisan Credit Card Scheme for Farmers ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...