×

திருத்துறைப்பூண்டி பகுதியில் கதிர் அறுவடை இயந்திர தட்டுப்பாடு போக்க விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, பிப். 13: திருத்துறைப்பூண்டி பகுதியில் அறுவடை இயந்திர தட்டுப்பாடு போக்க வேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஆண்டு 37 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் செய்த சம்பா சாகுபடி அறுவடைக்கு வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையில் கதிர்கள் சாய்ந்து மேலும் அறுவடை வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அறுவடை பாதித்தது. இருந்த போதிலும் அறுவடை துவங்கியது. ஆனால் கதிர் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு காரணமாக அறுவடை பாதித்து உள்ளது.தற்போது 40 சதவீதம் தான் அறுவடை முடிந்து உள்ளது. கதிர் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் இரவு நேரத்திலும் அறுவடை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் முடியும் அறுவடை வரும் மார்ச் மாதம் தான் முடியும். எனவே திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இந்த மாதத்தில் அறுவடை முடிக்க போதுமான கதிர் அறுவடை இயந்திரங்களை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்