×

ஒரத்தநாடு அருகே மலையேறி அம்மன் இசைவு திருவிழா துவங்கியது

ஒரத்தநாடு, பிப்.13: ஒரத்தநாடு தாலுகா கண்ணந்தங்குடியில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறும் மலையேறி அம்மன் இசைவு திருவிழா நேற்று துவங்கியது. முதல்நாள் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கண்ணந்தங்குடி கிராமத்தில் மலையேறி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இசைவு திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறும். இசைவு திருவிழாவை ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் சார்பில் மலையேறி அம்மனுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்கிட துவக்கி வைத்தனர். மலையேறி அம்மன் தேரோட்டமும் நேற்று துவங்கியது. இதனையொட்டி அம்மன் தேர் கண்ணந்தங்குடியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து இரவு கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தது. ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மதுவடி பகுதிகளில் தேங்காய் உடைத்து மாலை அணிவித்து வழிபட்டனர். ஒரத்தநாடு பகுதியில் புகழ்பெற்ற மலையேறி அம்மன் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தந்தனர். தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : clearance festival ,Mountaineer Amman ,Orathanadu ,
× RELATED போலீசார் மீது கல்வீச்சு: சிறுவன் உள்பட 5 பேர் கைது