×

சேதுபாவாசத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

சேதுபாவாசத்திரம் பிப்.13: சேதுபாவாசத்திரம் அருகே உடையநாடு - வீரியங்கோட்டை ராஜராஜன் பள்ளியில் கல்வியோடு, விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தெரிவித்ததாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் என, தலா 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். திருச்சி, நாமக்கல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில், பங்கேற்று பல மாணவர்கள் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

மாணவன் நபில், மும்பையில் நடந்த எல்போ பாக்சிங் குத்துச் சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கமும், முகமது நபில் திருச்சியில் நடைபெற்ற ஓபன் ஸ்டேட் எல்போ பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கமும், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ராஜராஜன் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பெற்று, முதலிடம் பெற்றனர். இதேபோல் நாமக்கல்லில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ராஜராஜன் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று முதலிடம் பெற்றது. மேலும் ஜியாவுதீன் என்ற மாணவன் தங்கப்பதக்கம், முகமது பயாஸ் என்ற மாணவன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தஞ்சையில் நடைபெற்ற எல்போ பாக்சிங் குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஹஷ்னா என்ற மாணவி தங்கப் பதக்கத்தையும், பாத்திமாரீமா என்ற மாணவி வெள்ளிபதக்கமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : school children ,Sethupavasatram ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள்,...