×

தஞ்சை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி

தஞ்சை, பிப்.13: தஞ்சை மாவட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டிகள்அன்னைசத்யாவிளையாட்டு மைதானத்தில் வரும் 25ம் தேதி காலை 9 மணியளவில்நடைபெறஉள்ளது. இப்போட்டியில் தஞ்சை மாவட்டத்திலுள்ள மாற்றுதிறனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிகொண்டு வரும் விதமாக போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. குறிப்பிட்ட பிரிவில் விளையாட கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒருவிளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ளமுடியும்.

தடகளபோட்டிகளில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீ. ஓட்டப் போட்டி, கால்பாதிக்கப்பட்டமாற்றுத்திறனாளிகளுக்கு 100மீ ஓட்டப் போட்டி, கை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீ ஓட்டப் போட்டி, குள்ளமானோருக்கு குண்டு எறிதல் போட்டி, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ. சக்கரநாற்காலி போட்டி, இருகால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெறவுள்ளது. பார்வையற்றோர்களுக்கு 50மீ. ஓட்டப் போட்டி முற்றிலும் பார்வையற்றோருக்கும் 100மீ. ஓட்டப் போட்டிமிககுறைந்த பார்வையற்றோருக்கும், நின்றநிலை தாண்டுதல் போட்டி மிக குறைந்த பார்வையற்றோருக்கும், குண்டு எறிதல் போட்டி முற்றிலும் பார்வையற்றோருக்கும், சாப்ட் பால் மிக குறைந்த பார்வையற்றோருக்கும் நடத்தப்படவுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோருக்கு 50மீ. ஓட்டப் போட்டிக்கு தன்மை முற்றிலும் இருக்காதவருக்கும், 100மீ ஓட்டப் போட்டிக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவருக்கும், சாப்ட் பால் எறிதல் போட்டிக்குதன்மை முற்றிலும் இருக்காதவருக்கும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டி மூளை நரம்புபாதிக்கப்பட்டவர்களுக்கும், குண்டு எறிதல் போட்டிஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவருக்கும் நடத்தப்படவுள்ளது. காதுகேளாதோர்களுக்கு 100மீ ஓட்டம், 200மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், 400 மீ ஓட்டம் ஆகியப்போட்டிகள்நடத்தப்படவுள்ளது.

குழுவிளையாட்டுப் போட்டிகள்: கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இறகு பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஓர் அணிக்கு 5 வீரர் மற்றும் வீராங்கனைகளும், மேசை பந்து அணிக்கு 2 வீரர் மற்றும் வீராங்கனைகளும், பார்வையற்றோருக்கான அடாப்டட் வாலிபால்அணிக்கு 7வீரர் மற்றும் வீராங்கனைகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறி பந்து போட்டியும் அணிக்கு 7 வீரர் மற்றும் வீராங்கனைகளும், காதுகேளாதோருக்கு கபடி போட்டிக்குஅணிக்கு 7 வீரர் மற்றும் வீராங்கனைகளும் கலந்துகொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்தவச் சான்று, மாவட்ட மாற்று திறன் நலஅலுவலரால் வழங்கப்பட்டசான்றுஅவசியம் கொண்டுவருதல்வேண்டும் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Persons ,Tanzania District Sports Competition ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...