×

28ம் தேதி துவக்கம் கொள்ளிடம் முதன்மை ஒன்றியமாக திகழ சிறப்பாக பணியாற்ற வேண்டும்

கொள்ளிடம்,பிப்.13: நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஒன்றியம் முதன்மை ஒன்றியமாக திகழ அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொள்ளிடம் ஒன்றிய குழு முதலாவது கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்காளர் கஜேந்திரன் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் பேசியது, கொள்ளிடம் ஒன்றியத்தில் குடிநீர், சாலை வசதி, ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஒன்றியம் முதன்மை ஒன்றியமாக திகழ நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் பேசியது, 20 வருடகாலம் ஒன்றியக்குழு தலைவராகவும், 20 வருடகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும், இதற்கிடையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன். எம்.பி., எம்.எல்.ஏ வாக பணிபுரிவதை விடவும் உள்ளாட்சியில் பணிபுரியாற்றுவது மகிழ்ச்சியானது என்றார். கூட்டத்தில் பாமக உறுப்பினர்கள் அளக்குடி சிவபாலன், குன்னம் அன்பழகன், ஆகியோர் பேசினர். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயசாரதி, சுமதி, ஒன்றிய பொறியாளர்கள் பிரதீஷ்குமார், மகேஸ்வரி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய மேலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags : bandit ,union ,
× RELATED அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு,...