சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அதிமுக, என்.ஆர்காங்கிரஸ் மக்களை ஏமாற்றி விட்டது

காரைக்கால், பிப்.13: புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியபோது, அ.தி.முக, என்.ஆர் காங்கிரஸ் பங்கேற்காதது மக்களை ஏமாற்றும் செயல் என, தமுமுக மாநில செயலாளர் அப்துல்ரஹீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காரைக்காலில் அவர் நிருபர்களிடம் கூறியது: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் வகையில், மத்திய அரசின் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், கடந்த 2 மாதமாக மக்கள் தன்னிசையாக தொடர்ந்து போராடி வரும் போராட்டத்திற்கும், மத்திய அரசு மதிப்பளித்து, குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை உடனே ரத்து செய்ய வேண்டும்.

சட்டசபை கூட்டத்தில் அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏகள் பங்கேற்காமல் புறக்கணித்தது, மக்களை ஏமாற்றும் செயல். ஒன்றுய் கூட்டத்தில் கலந்துகொண்டு, தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். அல்லது எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். இந்த செயல் காரைக்கால் சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Related Stories:

>