×

செங்கத்தில் கோயில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

செங்கம், பிப்.12: செங்கம் நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளது. இந்நிலையில், கோயில் செயல் அலுவலராக தேன்மொழி நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அறநிலையத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து செயல் அலுவலர் தேன்மொழி, வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில், அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயில், காக்கங்கரை விநாயகர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டார்.மேலும், செயல் அலுவலரை சந்தித்த செங்கம் நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழாக்குழுவினர், வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குடமுழுக்கு, பரிகார பூஜை செய்ய வேண்டும். அதேபோல், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிஷபேஸ்வரர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags : Temple ,Executive Officer ,
× RELATED சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்