பெரணமல்லூர் அருகே பைக் மோதி மூதாட்டி பலி

பெரணமல்லூர், பிப்.12: பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிசாமி மனைவி ஜீவா(56). இவர் நேற்று முன்தினம் ரகுநாத சமுத்திரம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு  துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார். அங்குள்ள கன்னிக்கோயில் அருகே சென்றபோது எதிரே செங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி(28) என்பவர் ஓட்டி வந்த பைக், ஜீவா மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த மக்கள் ஜீவாவை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கும், சத்தியமூர்த்தியை செய்யாறு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் ஜீவா மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>