×

காட்பாடியில் வீட்டில் பதுக்கி விற்பனை 12 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது

வேலூர், பிப்.12: காட்பாடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கில் கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.வேலூர் அடுத்த காட்பாடியில் கஞ்சா விற்பனை செய்வதாக டிஎஸ்பி துரைபாண்டியனுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அன்றிரவு காட்பாடி கே.ஆர்.எஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 12 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா புகைக்க பயன்படுத்தும் பைப், கஞ்சா விற்பனை செய்வதற்கான மின்னணு தராசு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ₹12 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அகத்தியர் தெருவை சேர்ந்த சத்யா(20), ஆந்திர மாநிலம் சித்தூர் வசந்தபுரத்தை சேர்ந்த மோனீஷ்(20), நெல்லூரை சேர்ந்த சேட் சித்திக்(19), விசாகப்பட்டினம் சிப்ருபள்ளியை சேர்ந்த தமேரா தினேஷ்(20), சித்தூர் தரகம்பாடியை சேர்ந்த மித்ராசாய் பாலாஜி(19), நந்திகாமா பகுதியைச் சேர்ந்த ரவுலிபூர்ணா சந்திரா சாய்(20), விசாகப்பட்டிணம் முர்ரு பரணி ராகவ்(19), தெலங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்த மாரிநிக்கில்ரெட்டி(21) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மிட்டா திருமா பாஸ்கர்ரெட்டி(21), நாதசிவாநாயுடு(20), யஷ்வந்த்பாபு(20), சிக்ரிஅஷ்ஷா(21) ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Katpadi ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி