×

தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

நெல்லை, பிப்.12: வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம்  பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு முகாமில் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமம் தலைவர் எஸ்.தங்கப்பழம் மற்றும் கல்வி குழுமம் தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் காந்திராமன் தலைமை வகித்தார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவு துறைத்தலைவர் பாலமுருகன் காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் குருபிரசாத் செய்திருந்தார்.

Tags : Corona Antivirus Awareness Camp ,Goldfields Polytechnic College ,
× RELATED ஓசூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்