×

சிவத்தையாபுரம் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

ஏரல், பிப். 12: சிவத்தையாபுரம் பள்ளியில் நடந்த விழாவில் சண்முகநாதன் எம்எல்ஏ, மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார். பள்ளி செயலர் அச்சுதனன், கல்விக்குழு தலைவர் சின்னதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேய்க்குளம் நிலச்சுவன்தார்கள் விவசாய அபிவிருத்தி சங்க பொருளாளர் சிவத்தையாபுரம் குணசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ். துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், வைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன், சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா, சிவத்தையாபுரம் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ், பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், பிச்சலிங்கராஜ் மற்றும் ஜீவா, பால்குணம், எட்வர்ட் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை பவானி நன்றி கூறினார்.

Tags : Sivathayapuram School ,
× RELATED தலைக்காட்டுபுரத்தில் குடிநீர்...