×

கோவில்பட்டியில் வன்முறை எதிர்ப்பு தின கருத்தரங்கம்

கோவில்பட்டி, பிப்.12: கோவில்பட்டியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு வன்முறை எதிர்ப்பு தினம் கருத்தரங்கம் நடந்தது.    இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட தலைவர் சுப்பாராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் நம்.சீனிவாசன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக நகர செயலாளர் ஆர்ம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்பி அப்பாத்துரை, இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன், எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கருத்தரங்கில் இந்திய விடுதலை போர் எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடந்தது. திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி, இலக்கிய உலா ரவீந்தர், உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சிவானந்தம், உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் ஜெயகிறிஸ்டோபர், மாவட்ட துணை செயலாளர் ஜெயா ஜனார்த்தனன், ஆதிதமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் சின்னத்தாய், ஐஎன்டியூசி மாவட்ட பொதுசெயலாளர் ராஜசேகரன், அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், வக்கீல் விஜயகுமார், அம்பேத்கர் சிலை பாதுகாப்பு குழு தலைவர் தாவீதுராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Anti-violence Day Seminar ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!